வெள்ளி, 16 செப்டம்பர், 2011

15-09-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15-09-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

QITC அழைப்பாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் "சிறு பாவங்களும், பெரிய இழப்புகளும்" என்ற தலைப்பிலும்,

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் "நாவு நன்மைக்கா? தீமைக்கா?" என்ற தலைப்பிலும்,

 QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "உறவுகள் ஓர் அலசல்" என்ற (தொடர்) தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

QITC துணைப் பொருளாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC துணைச் செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!