கத்தார் இந்திய தவ்ஹீத் மையம் கடந்த வெள்ளிகிழமை மாலை பதினாலாம் தேதி " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் , சகோதரர் முஹம்து அல்தாபி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவான முறையில் பதில் அளித்தார்கள்.
கேள்வி கேட்ட அனைத்து மாற்று மத சகோதர சகோதிரிகளுக்கு திருகுர்ஆன் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் " திருமறையை தாங்களும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்ட மாற்று மத அன்பர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அரங்கத்தின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி ,இருக்கைகள் இல்லாமல் பலர் சுவர் ஓரமாக நின்று நிகழ்ச்சியை கேட்டுகொண்டிருந்தர்கள் . நிற்கவும் இடம் இல்லாமல் பாதைகளினிடையே மக்கள் அமர்ந்தார்கள் .
மேலும் கூட்டம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நிர்வாகிகள் , துரிதமாக செயல்பட்டு மர்கசிலிருந்து நூறு பிளாஸ்டிக் இருக்கைகளை கொண்டுவந்து போட்டனர்.
வளைகுடா நாடுகளின் பள்ளி விடுமுறை என்பதால் சுமாரான கூட்டம் தான் வரும் என்று எண்ணிய நிர்வாகிகள் அதற்கேற்ற ஏற்பாட்டுடன் தான் இருந்தனர். கூட்டம் இரட்டிப்பாக வந்தால் திக்குமுக்காடிய நிர்வாகிகள் நிகழ்ச்சியின் நடுவே உணவு ஆர்டரை கூட்டினர்.
பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் , சிறய வேன்கள் தோஹாவின் பல பாகங்களிருந்தும் சகோதரர்களை கொண்டுவர பயன்பட்டன. வாகன போக்குவரத்து ஏற்பாட்டை சகோதரர் மீரான் அவர்களும் ,சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்ககளும் சிறப்பாக செய்து இருந்தனர். தொண்டர்கள் ஒருங்கிணைப்பை சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்கள் கவனித்து கொண்டார்கள். " Islam for Global solutions" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் சிறப்பான முறையில் பணிகளை கவனித்து கொண்டார்கள் .
துணை செயலாளர் முஹம்மது அலி MISC அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அஹ்மத் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். பொருளாளர் இப்றாஹீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல மாற்று மத அன்பர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
-------------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110