(அல் குர்ஆன் 3:97)
"உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2286
ஹஜ் கிரியைகள் சுருக்கம்
1. பிறை 8: இஹ்ராம் கட்டுதல்
2. பிறை 8: இஹ்ராமுடன் மினாவில் தங்குதல்
3. பிறை 9: நமீராவில் உரை கேட்டல்
4. பிறை 9: அரஃபாவில் தங்குதல்
5. பிறை 10: முஸ்தலிஃபாவில் தங்குதல்
6. பிறை 10: லுஹா நேரத்தில பெரிய ஜம்ராவில் மட்டும் கல் எறிதல்
7. பிறை 10: பிராணியை பலி கொடுத்தல்
8. பிறை 10: தவாஃப் அல் இஃபாளா செய்தல்
9. பிறை 10: ஸஃபா மர்வாவில் சஃயீ செய்தல்
10. பிறை 10: தலை முடியை மழித்தல்
11. பிறை 11,12 & 13 ஆகிய இரவுகளில் மினாவில் தங்குதல்
12. பிறை 11,12 & 13, லுஹருக்குப்பின் 3 ஜம்ராக்களிலும் கல்லெறிதல்
13. இறுதியாக தவாஃப் அல்விதா செய்தல்
இந்த கைஏட்டின் அறிமுகம்
ஹஜ் என்ற வணக்கத்தை நாம் மூன்று வகைகளில் செய்யலாம் அதில் ஒன்று தமத்துஃ முறையில செய்யும் ஹஜ் ஆகும். தமத்துஃ முறையில் ஹஜ் செய்வது எப்படி என்பதை முதலில் பார்த்து விட்டு மற்ற வகை ஹஜ்ஜில் இருக்கும் வித்தியாசங்களை இறுதியாக பார்ப்போம்.
தமத்துஃ என்றால்: சுகம் பெறுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளுதல் என்று பொருள்.
தமத்துஃ முறை ஹஜ் செய்ய ஷவ்வால் மாதத்திலிருந்து துல்ஹஜ் மாதம் 8ஆம் நாளுக்கு இடைப்பட்ட நாட்களில், நாம் உம்ராவின் கிரியைகளை செய்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
பிறகு துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் செய்வதற்காக மீண்டும் இஹ்ராமின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஹஜ்ஜை நிறை வேற்ற வேண்டும்.
(உம்ரா செய்ய வரிசை எண் 1 மற்றும் வரிசை எண் 8 முதல் 10 வரை பார்க்கவும்.)
(ஹஜ்ஜின் கிரியைகளை மட்டும் செய்ய வரிசை எண் 2 முதல் 13 வரை பார்க்கவும்).
இதற்கான ஆதாரங்களை அடி குறிப்பில் குறிப்பிடப்பட்ட எண்ணை கொண்டு கடைசி பக்கத்தில் பார்க்கவும்.
1. பிறை 8: இஹ்ராம் கட்டுதல்
ஹஜ் செய்ய துல்ஹஜ் 8 ன்று குளித்து விட்டு இஹ்ராம் அணிய வேண்டும். (2)
- ஆண்கள் தைய்யல் இல்லாத இரண்டு துணிகள் அணிய வேண்டும்; தலையையும் கணுக்காலையும் மறைக்கக் கூடாது. செருப்பை அணிந்து கொள்ளலாம். (3)
- பெண்கள் முகம் கைமணிக்கட்டையை தவிர, உடலை மறைக்கும் எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். (5)
இவ்வாறு தயாராகி “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும் இவ்வாறு கூறுவதே இஹ்ராமாகும், இதன்பின் பெரிய ஜம்ராவில் கல் எறியும் வரை தல்பியாவை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்1.
உம்ரா செய்பவர்கள் தங்களுக்கான மீகாத்தை அடைந்து “லப்பைக்க உம்ரதன்” என்று கூறி மஸ்ஜிதுல் ஹராமுக்கு செல்ல வேண்டும்; பள்ளியில் நுழையும் வரை தல்பியாவை சப்தமிட்டு கூற வேண்டும். (1) & (7)
இஹ்ராமின் போது கவனிக்க வேண்டியவை:
a) முடி மற்றும் நகங்களை களையக் கூடாது (3)
b) நறுமணம் பூசக் கூடாது (4)
c) ஆண்கள் தலையை மறைக்க கூடாது, தைய்யல் ஆடைகளை அணியக் கூடாது (3)
e) இல்லறத்தில் ஈடுபட கூடாது (4)
f) திருமண ஒப்பந்தம் செய்ய கூடாது (4)
g) வேட்டையாடுதல் கூடாது (6)
தல்பியா வாசகம்
பிறை 8 இஹ்ராமுடன் முற்பகல் நேரத்தில் மினாவை அடைந்ததும், அங்கே தொழுகைகளை குறித்த நேரங்களில் சுருக்கி தொழ வேண்டும், மறுநாள் பிறை 9 அன்று சூரியன் உதிக்கும் வரை மினாவிலேயே தங்கியிருக்க வேண்டும். (2), (8) & (9)
3. பிறை 9: நமிராவுக்கு செல்லுதல்
அரஃபா எல்லையில் உள்ள நமிரா பள்ளிக்கு சென்று, அங்கு நிகழ்த்தப்படும் உரையை கேட்டு, லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை ஜம்மு கஸர் செய்து தொழ வேண்டும், பிறகு அரஃபாவின் எல்லைக்குள் செல்ல வேண்டும். நமிராவுக்கு வர தாமதமானால் நேரடியாக அரஃபாவிற்கு சென்றுவிட வேண்டும். (2) & (9)
4. பிறை 9: அரஃபாவில் கட்டாயம் தங்குதல்
அரஃபாவில் மக்ரீப் வரை கட்டாயம் தங்க வேண்டும். அரஃபாவில் (ஜபலுர் ரஹ்மா அருகில்) அதிகம் துஆ செய்ய வேண்டும்(10),
அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபாவில் சென்று மக்ரிப் மற்றும் இஷாவை ஜம்மு கஸர் செய்து தொழ வேண்டும், மஷ்அருல் ஹராம் என்னும் இடத்தில் கிப்லாவை முன்னோக்கி அதிகம் துஆ செய்ய வேண்டும். (2)
முற்பகல் (லுஹா) நேரத்தில் மினாவில் உள்ள ஜம்ரதுல் அகபா எனும் பெரிய ஜம்ராவில் மட்டும் அல்லாஹு அக்பர்" என்று கூறிக் கொண்டே ஏழு சிறிய கற்களை எறிய வேண்டும். கற்கள் அந்த தூணில் படவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை அந்த ஹவுலுக்குள் கற்கள் விழுவதே போதுமானது. இதன் பிறகு தல்பியாவை நிறுத்திவிட்டு, கிப்லாவை நோக்கி துஆ செய்ய வேண்டும். (2) & (13)
பெண்கள் மற்றும் பலவீனர்கள் மட்டும் பிறை 10 இரவிலே ஜம்ராவில் கல் எறியும் கிரியத்தை நிறைவேற்றி விடலாம். (15)
இத்துடன், மனைவி தொடர்பைத் தவிர மற்ற இஹ்ராமின் தடைகள் நீங்கும். (14)
தவாஃபை ஹஜருல் அஸ்வத் இருக்கும் மூலையிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறி அதை தொட்டு முத்தமிட்டு தவாஃப் செய்ய துவங்க வேண்டும், தொட முடியவில்லை என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறி கையால் சைகை செய்து துவங்க வேண்டும், இவ்வாறு ஒவ்வொரு சுற்றின் போதும் இதே போல் செய்ய வேண்டும், மேலும் காபாவின் இன்னொரு மூலையான ருக்னுல் யமானியை அடையும் போது அதை தொட வேண்டும், தொட முடியவில்லை என்றால் சைகை தேவை இல்லை, ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் செல்லும் போது ரப்பனா ஆதினா ஃபித்துன்யா.. என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும் அஜருல் அஸ்வதை கடந்ததும் நமக்கான துஆக்களை விரும்பினால் செய்துக் கொள்ளலாம், இவ்வாறாக ஏழு சுற்றுகளை சுற்ற வேண்டும், தவாஃப் செய்த பிறகு மகாமே இப்ராஹீமுக்கு சென்று
வத்தகிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா
என்று கூறி அங்கு இரண்டு ரக்ஆத்கள் தொழ வேண்டும், இதில் சூரதுல் ஃபாதிஹா ஓதிய பிறகு முதல் ரக்ஆத்தில் சூரா அல் காஃபிரூனும் இரண்டாம் ரக்ஆத்தில் சூரா அல் இக்லாஸையும் ஓத வேண்டும், பிறகு ஜம் ஜம் நீரை அருந்திக் கொள்ள வேண்டும், அதில் சிறிதளவு தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும், முடிந்தால் மீண்டும் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட வேண்டும். (2) & (16-20)
உம்ரா செய்வர்கள், மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்ததும் தவாஃப் அல் குதூமை செய்ய வேண்டும், தவாஃப் அல் குதூமில் முதல் மூன்று சுற்றின் போது குலுங்கி ஓட வேண்டும் மற்ற நான்கு சுற்றிலும் சாதாரணமாக நடக்க வேண்டும், மேலும் இந்த தவாஃபின் போது ஆண்கள் மட்டும் கண்டிப்பாக தைய்யல் இல்லாத ஆடையை அணிந்து இருக்க வேண்டும், மேலும் அந்த ஆடையை வலது தோள்பட்டை தெரியும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும், மற்ற அனைத்தும் மேலே குறிப்பிட்டதை போல் செய்ய வேண்டும். (24) & (25)
இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்
என்று கூறி, அல்லாஹ் ஸஃபாவை கொண்டு ஆரம்பித்ததால், ஸஃபாவிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஸஃயீ செய்ய வேண்டும். ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு செல்லுவது ஒரு சுற்று, மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு திரும்புவது இரண்டாம் சுற்று — இவ்வாறு மொத்தம் ஏழு சுற்றுகள் செய்ய வேண்டும். ஸஃயீ ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடியும். இடையில் பச்சை விளக்கு (சம தரை) பகுதியை அடையும் போது சிறிது வேகமாக (குலுங்கி) ஓட வேண்டும். ஸஃபா மற்றும் மர்வாவில் ஏறிய பின் கிப்லாவை நோக்கி திக்ருகளை செய்ய வேண்டும்.
லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கூறிய பின் கீழ் உள்ள திக்குரை மூன்று முறை ஓதுங்கள். (26)
உம்ரா செய்த, பின்பு ஹஜ் செய்ய வேண்டி இருப்பதால் உம்ராவின் போது முடியை கத்தரித்து கொள்ள வேண்டும், பின்பு ஹஜ் செய்யும் போது தலைமுடிகளை மழித்துக் கொள்ள வேண்டும், முடிகளை மழிக்கும் போது வலது புறமாக மழிப்பது நபி வழியாகும். (21)
பெண்கள் முடியை மழிக்க கூடாது சிறிதளவு கத்தரித்து கொள்ள வேண்டும். (22)
குறிப்பு: பிறை பத்து அன்று செய்யப்படும் கிரியைகளின் வரிசையை மாற்றி செய்வதும் எந்த குற்றமுமில்லை. (23)
11. பிறை 11, 12 மற்றும் 13 மினாவில் தங்குதல்
12. பிறை 11, 12 மற்றும் 13 கல்லெறிதல்
இந்த மூன்று நாட்களிலும் லுஹருக்கு பிறகு ஏழு கற்கள் வீதம் மூன்று ஜமராகளிலும் அல்லாஹு அக்பர் என்று கூறி கொண்டே கற்களை எறிய வேண்டும், பின்பு கிப்லாவை முன்னோக்கி துஆ செய்து கொள்ள வேண்டும். (28)
13. இறுதியில்: தவாஃப் அல் விதா செய்தல்
மேலே சொல்லபட்ட கிரியைகளை நிறைவு செய்து விட்டால் ஹஜ் கடமை நிறைவேறிவிட்டது, நாம் எப்பொழுது நாட்டிற்கு திரும்புவோமோ அப்பொழுது மட்டும் தவாஃப் அல் விதாவை செய்துவிட்டு, மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்ஆத்களை தொழுதுவிட்டு செல்ல வேண்டும், இதில் ஸஃயி செய்ய தேவை இல்லை. (29)
வல்ல ரஹ்மான் நம்முடைய ஹஜ் உம்ராவை நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழியிலேயே செய்து, நன்மைகளை பெற கூடியவர்களாக ஆக்குவானாக!
மாதவிடாய் என்பது இயற்கையான நிலை. ஹஜ்ஜின் போது இது ஏற்பட்டாலும், ஹஜ்ஜில் எந்த சிக்கலும் இல்லை. சில விஷயங்கள் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜில் செய்யும் மூன்று அம்சங்கள்:
1. தொழுகைகளை நிறைவேற்றுவது
2. குறிப்பிட்ட சில இடங்களில் தங்குவது
3. மஸ்ஜிதுல் ஹராமில் தவாஃப் செய்தல்
மாதவிடாயில் இருக்கும் பெண்கள் தொழ வேண்டிய அவசியமில்லை என்பதால் அவர்கள் தொழாமல் இருப்பது ஹஜ்ஜில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பெண்கள் மாதவிடாயின் போது, “தவாஃபை தவிர, ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்ய நபிகளார் அனுமதித்தார்கள்.
மினா மற்றும் அரஃபாவில் தங்குவது, கல்லெறிவது ஆகியவை செய்யலாம்.
பிறை 10 அன்று செய்யும் தவாஃப் செய்யாமல், மாதவிடாய் நின்ற பிறகு கட்டாயம் இந்த தவாஃபை செய்து கொள்ள வேண்டும், இத்துடன் ஹஜ் கிரியைகள் நிறைவு பெறும், ஒருவேளை விடை பெறும் நேரத்தில் செய்யும் தவாஃப் அல் விதாவின் போது மாதவிடாய் ஏற்ப்பட்டால் இந்த தவாஃபை செய்யாமலே விடை பெறுவது அவர்கள் மீது குற்றமாகாது. (30)
மூன்று வகை ஹஜ்ஜின் ஒப்பீடு:
ஹஜ் தமத்துஃ |
ஹஜ் கிரான் |
ஹஜ் இஃப்ராத் |
இதன்
அர்த்தம்: சுகம்
பெறுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளுதல் |
இதன்
அர்த்தம்: ஹஜ் உம்ரா
இரண்டும் சேர்த்து செய்தல் |
இதன்
அர்த்தம்: ஹஜ் மட்டும்
தனித்துச் செய்தல் |
நிய்யத்: உம்ராவின்
போது லப்பைக்க உம்ரத்தன் பிறகு ஹஜ்ஜின் போது லப்பைக்க ஹஜ்ஜன் என்று
கூற வேண்டும் |
நிய்யத்: லப்பைக்க
ஹஜ்ஜன் வ உம்ரதன் என்று கூற வேண்டும் |
நிய்யத்: லப்பைக்க
ஹஜ்ஜன் என்று கூற
வேண்டும். |
தமத்துஃ ஹஜ்
செய்பவர் முதலில் உம்ரா செய்து இஹ்ராமை களைந்து, துல் ஹஜ் 8 அன்று
மீண்டும் இஹ்ராம் கட்டி ஹஜ் செய்ய வேண்டும். |
ஒரே
இஹ்ராமில் உம்ராவும் ஹஜ்ஜும் செய்ய வேண்டும் உமரா செய்த பிறகு, இஹ்ராமை களையாமல் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். |
தவாஃப் அல் குதூம்
செய்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிய பின் விரும்பினால் உம்ரா செய்யலாம். |
குர்பானி
கொடுக்க வேண்டும் |
குர்பானி பிராணியுடன்
சென்றவர் இவ்வகை ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும். |
குர்பானி கொடுக்க
தேவை இல்லை |
ஆதாரங்கள்:
(1) புகாரி 1524
(2) முஸ்லீம் 2137
(3) புகாரி 134
(4) முஸ்லீம் 2522
(5) புகாரி 1838
(6) அல் குர்ஆன் 5:96
(7) முஸ்லீம் 2194, திர்மிதீ 759
(8) புகாரி 1634, 1745
(9) புகாரி 1081-1083
(10) முஸ்லீம் 2138
(11) புகாரி 1658
(12) முஸ்லீம் 2248
(13) புகாரி 1544, 1683, 1687
(14) அபூ தாவூத் 1708
(15) புகாரி 1677, 1678, 1856
(16) அபூ தாவூத் 1710
(17) புகாரி 1606, 1612
(18) புகாரி 166, 1601
(19) அஹ்மத் 14851, அபூ தாவூத் 1616
(20) அஹ்மத் 14707
(21) புகாரி 1727
(22) அபூ தாவூத் 1694
(23) புகாரி 124, 1738
(24) முஸ்லீம் 2139, திர்மிதீ 884
(25) திர்மிதீ 787, அபூ தாவூத் 1607
(26) புகாரி 1556
(27) முஸ்லீம் 2290
(28) புகாரி 1751
(29) புகாரி 1755
(30) புகாரி 305, 1650