சனி, 23 ஆகஸ்ட், 2008

வாராந்திர சிறப்பு பயான்

21-01-2008 அன்று வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்குக்பின் மர்கஸில் நடைபெற்ற வாராந்திர சிறப்பு பயானில் "ரமலானின் சிறப்புகள் " , என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி நஜுமுல்ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பின்னர் " மகான்களுக்கு சக்தியுண்டா ?" என்ற தொடர் தலைப்பில் வாரந்தோறும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெறும் ஜும்மா பேர்ருரையின் ஓளி தகட்டை படம்காட்டும்கருவியின் மூலம் அரங்கத்தில் கண்பிக்கப்பட்டது. இஸ்லாம் கூறும் கடவுட் கொள்கையில் ஏக இறைவன் அல்லாவிடம் மட்டுமே உதவி கோரவேண்டும் , அல்லாஹ்அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் கூடாது என்ற ஏகத்துவ சிந்தனையில் உறுதியுடன் நிற்கவும் மகான்களுக்கு சக்தியுண்டு என்று நம்பி தங்களுடைய இன்னல்கள் நீங்க மகான்கள் காலடியில் விழிந்து கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தினை நிரந்தர
நரகத்திலிருந்து காப்பற்ற ஆணித்தரமாகவும் தெளிவான குர்ஆன் ஹதீஸ்
ஆதரங்களுடன் சிந்தனையை தூண்டும் தொடர்தான் இந்த தொடர்.

இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கேட்டு பலனடைந்தனர்.