திங்கள், 18 ஆகஸ்ட், 2008

போலிகள்! அபாயம்!

இஸ்லாத்தின் பெயாரல் பல போலி இணையத்தளங்கள் வலைமனையில்
ஊடுருவி , இஸ்லாத்திற்கு எதிரான பொய்களையும் அவதூற்களையும் பரப்பிவருகின்றன .இதை மேம்போக்காக வலைத்தளங்களை படிக்கும் எண்ணற்ற வாசகர்கள் உண்மை என நம்பி விடுகின்றனர். அதை மேற்கோள் காட்டி மற்றவர்களுக்கும் விரலின் நுனி அபாயம் தெரியாமல் அனுபிவிடுகின்ற்னர். தங்களுடை மார்க்க அறிவின்மையே இதிலிருந்து புலப்படுகிறது.மார்க்கம் என்பது மளிகை கடை சாமான்கள் இல்லை. அரைகிலோ கத்திரி காய் வாங்க ஆயிரம் முறை திருப்பி பார்க்கும் என் சகோதரா ! நீங்கள் வெறுமனே சோம்பி கிடக்கும் ஓய்வு நேரங்களிலோ அல்லது உங்களுடைய பொழுதுபோக்கு நேரங்களிலோ ஜாலிக்காக அனுப்பும் ஜோக்குகளின் மெயில் போல் அல்லாமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து மார்க்க விசியங்களை அனுப்புங்கள். நமக்கு வந்த ஒரு மெயிலில் அல் குரான் இணையத்தளம் ஒன்று அனுபப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்யும் போது போலியான இணையத்தளம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை உடனடியாக கத்தார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு (QTEL) தகவல் அனுப்பப்பட்டது. அந்நிறுவனம் ஆய்வு செய்கிறோம் என்று பதிலளித்து. அடுத்த வாரத்தில் மேற்குறிப்பிட்ட இணையதளத்தையே தடை செய்துவிட்டது. QTEL க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது நமது இணைய தளம்.