சனி, 9 ஆகஸ்ட், 2008

சனயாவில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு

ஏக இறைவன் திரு பெயரால்

கடந்த வெள்ளிகிழமை காலை பத்துமணி அளவில் சனையா அல் அத்தியா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பானார் உள் அரங்கில் கத்தார் இந்தியா தவ்ஹீத் மையத்தின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது." ரமலானை வரவேற்ப்போம் "
என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் உரையாற்றினர் . இதில் சனையா வை சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் .பின்னர் செயலாளர் மசூத் அவர்கள் வருகின்ற ரமலானை அடுத்து இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கக்கூடிய சிறப்பு நிகழ்ச்சிகளின் திட்டங்களை பற்றி எடுத்து கூறினார் . எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளும் சிறப்புற நடக்க எல்லோரும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டார் .குறிப்பாக பித்ரா மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றி எல்லா தரப்பு சனையா வாழ் தமிழ் சகோதரர்களிடம் எடுத்து கூற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.