செவ்வாய், 22 ஜூன், 2010

தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்


10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் வாரந்திர சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியின் போது , தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

அவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார் . அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என்ற பெயரே தான் விரும்புவதாகவும் , அதையே தான் சூட்டி கொள்வதாகவும் கூறினார் .

கத்தருக்கு வந்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டதாகவும் , தன்னுடன் பணிபுரியும் சக முஸ்லிம்கள் தொழுவதற்காக பள்ளிக்கு செல்லும் போது தான் மட்டும் தனித்து இருந்த நிலையில் , இஸ்லாமிய கடவுட் கொள்கையை பற்றி ஆழமாக அறிந்துக்கொள்ள விரும்பிய போது இஸ்லாமிய சகோதரர்கள் அளித்த பல் வேறு இஸ்லாமிய நூல்கள் தான் தனக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று கூறினார் .

தான் இஸ்லாத்தை படித்து அறிந்து கொண்டது முதல் ,ஒரு கடவுள் தான் இருக்க முடியும் , மேலும் அந்த கடவுள் தான் இவ்வுலகை படைத்தான், இணை துணை இல்லாத அக்கடவுளை மட்டும் வணங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஆழமாக தன்னுள்ளத்தில் ஏற்படுத்திக்கொண்டதாகவும் , இம்மார்க்கத்தை எடுத்துரைத்த அல்லாஹுவின் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்கள் தான் இறுதி தூதர் என்று நம்புவதாகவும் கூறினார்.

இஸ்லாத்தை தான் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்த அனுபவத்தை சொல்லும்போது ,ஒரு இஸ்லாமிய பேச்சாளர்க்குண்டான பாணியில் விளக்கியது ,அரங்கத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது . பின்னர் QITC யின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , திரு குர்ஆன் தமிழாக்கத்தையும் , தொழுகை பயிற்சி நூலையும் வழங்கினார் . மூத்ததலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆவணங்களில் பெயர் மாற்றம் மற்றும் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் , கத்தர் இந்திய மையம் வழங்கும் என்று சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தெரிவித்தார்கள் .


அல்ஹம்துலில்லாஹ் !நேர் வழி பெற்றோர்க்கு அவன் ( அல்லாஹ்) நேர் வழியை அதிகமாக்கி ,அவர்களுக்கு (தன்னைப்பற்றி அச்சத்தையும் )

வழங்கினான் . (திரு குர்ஆன் : சூரா முஹம்மது 47:17 )