ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

அல்கோர் கம்யூனிட்டி தாருல் அர்கம் மையத்தில் 27-10-2011 வியாழன் இரவு வாரம் விட்டு வாரம் நடத்தப்படும் குடும்பத்தினர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.QITC அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISC அவர்கள், "இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 14-10-2011 அன்று நடைபெற்ற மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் 1.ரஹ்மத்துன்னிஷா, 2.ஆயிஷா பானு, 3.ரஹ்மத் ரஹானா ஆகியோருக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்.