திங்கள், 12 டிசம்பர், 2011

"இஸ்லாத்தின் பார்வையில் இணைய உலகம்" சிறப்பு நிகழ்ச்சி (08-12-2011)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 08-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் QITC அழைப்பாளர் சகோதரர். மஸ்வூத் அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் இணைய உலகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

கணினி விளக்கக்காட்சியுடன் (Computer Presentation) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாம் இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில் இன்டர்நெட், ஈமெயில் மற்றும் சமூக இணைய தளங்களை தேவைக்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும்; மார்க்க அடிப்படையில் நமக்கு வரும் ஈமெயில் செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது; நேரத்தை வீணாக்கக்கூடாது போன்ற அறிவுரைகளை அதற்கான ஆதாரங்களுடன் விளக்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.