சனி, 30 ஜூலை, 2011

28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

QITC
மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.


பள்ளி மாணவர் முஹம்மத் ஜியாவுதீன், "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். QITC அழைப்பாளர் அன்சார் மஜ்தி அவர்கள் "ரமலானும் ஈமானும்" என்ற தலைப்பிலும், சவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சம்பவங்கள் முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு “கேள்வி – பதில்”  நிகழ்ச்சியை QITC அழைப்பாளர்கள் முஹம்மத் அலீ MISc மற்றும் முஹம்மத் தமீம் MISc அவர்கள் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

QITC
செயலாளர் M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக QITC தலைவர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் வரவிருக்கும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும், அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் தருமாறும் அறிவிப்பு செய்தார்கள்.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.