ஞாயிறு, 17 ஜூலை, 2011

கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்
அல்லாஹ்வின் அருளால், கடந்த 14-07-2011 வியாழன் அன்று நடந்த கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சியில் கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார்கள்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, 04-07-2011 திங்கட்கிழமை அன்று அவருக்கு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக இஸ்லாமிய மார்க்கம் எத்தி வைக்கப்பட்டது.
QITC செயலாளர் சகோதரர் ஷாஜஹான் அவர்கள் திருமறைக் குர்ஆன் தமிழாக்கத்தினை வழங்கினார்கள்.

மேலும் அவருக்கு தூய இஸ்லாத்தினை, QITC அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம், MISC அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.