திங்கள், 29 ஜூலை, 2013

அல் கோர் கிளையில் ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி 25-07-2013


கடந்த 25-07-2013 அன்று வியாழக்கிழமை, அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல் கோர் கிளையில், ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி அல் கோர் பொருப்பாளர் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் தலைமையில் அல் கோர் உள் விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக மௌலவி முஹம்மது லாயிக் அவர்கள் "நபீலான வணக்கங்களும் நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்ததாக மௌலவி முஹம்மது தமீம் அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக தமிழ் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் "எதிர்ப்புகளை வென்ற ஏகத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர்கள் ஏகத்துவ எழிச்சி பற்றிய சில விசயங்களை செய்முறையின் மூலம் விளக்கிக் காட்டினார்கள்.

மேலும் QITC நடத்திய ரமலான் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் அல் கோர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட தமிழறிந்த இஸ்லாமிய சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ் !