ஞாயிறு, 21 ஜூலை, 2013

19-07-2013 வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு


19-07-2013 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் "வஹி மற்றும் மாநபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்து வந்த சொல் மட்டுமே மார்க்கம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.