செவ்வாய், 20 மார்ச், 2012

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ்


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ் 

நாள் : 22 /03 /2012 வரும் வியாழன் இரவு பயான் முடிந்ததும் 
இடம் : QITC மர்கஸ்

அன்பிற்குரிய சகோதரர்களே ! 
கடந்த வாரம் வியாழன் அன்று நடைபெற்ற இலங்கை சகோதரர்களுக்கான தாவா கூட்டத்தில் கீழ்க்கண்ட  விசயங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 
அதன் விவரம் வருமாறு:
1 . சனய்யா கர்வா கேம்பில் ஒவ்வொரு புதன் கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது.
2 . சனய்யா டொயோடா கேம்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது  அல்ஹம்து லில்லாஹ் !
கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் இந்த பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் தாவா வை துரிதப்படுத்துவது சம்மந்தமாக  ஆலோசிக்கப்பட்டது . மற்ற இடங்களில் உள்ள இலங்கை மற்றும் இந்திய மக்களிடம் இந்த தூய ஏகத்துவம் சென்றடைய வேண்டு மென்றால் நம் அனைவருடைய பங்களிப்பும் கண்டிப்பாக அதக அதிகம் இருக்கவேண்டும். மென்மேலும் தாவா வளர வேண்டும் அதனடிப்படையில் வரும் வியாழன் இரவு அன்றும் QITC மர்கஸில் பயான் முடிந்ததும் வழக்கம் போல் நமது ஆலோசைக்கூட்டம் உள்ளது. இதில் அனைத்து இலங்கை சகோதரர்களும் தங்களுக்கு அறிந்த சகோதரர்கலுக்கு தகவலை எடுத்துரைத்து  தங்களுடன் அழைத்து வந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.