ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" - 02/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2013 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் பேசினார்கள். பின்னர் சிறப்பு பேச்சாளர் மவ்லவி கே, அப்துன் நாசர் Misc அவர்கள் "தர்மம் ஓர் கேடயம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இறுதியாக துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!