திங்கள், 16 பிப்ரவரி, 2015

அண்டை வீட்டாரின் உரிமைகள்


அண்டை வீட்டாரின் உரிமைகள்


மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன ஆறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளன. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும்பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறன. இந்த உறவுகளை நல்ல முறையில் கவனித்துவருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையில் வாழ்வான்.

இந்த உறவு முறைகளில் அண்டை வீட்டாருடன் ஏற்படும் உறவு மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்ல முறையில் அமையவேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும். திருக்குர்ஆன்,நபிமொழிகளில் அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும்,உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும்,பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)

நாம், நன்மை செய்ய வேண்டியவர்களின் பட்டிய­ல் அண்டைவீட்டாரை அல்லாஹ்இணைத்துள்ளான். மேலும் உறவினரான அண்டை வீட்டாராக இருந்தாலும் சரி! அல்லதுஉறவினரல்லாத அண்டை வீட்டாராக இருந்தாலும் சரி! அவர்களுக்கு நன்மை செய்வதுமுஸ்­ம்களின் கடமை என்பதை மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ்தெளிவுபடுத்துகிறான்.

அவ்வசனத்தின் இறுதியில் ''பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்'' என்ற வாசகத்தின் மூலம் அண்டை வீட்டாரை அற்பமாகநினைக்கக்கூடாது என்பதையும், அவர்களையும் நம்மை போன்றே எண்ண வேண்டும்என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.


மூன்று வகை அண்டை வீட்டார்

அண்டை வீட்டார் அதிகபட்சமாக மூன்று உரிமைகளைப் பெற்றவராகத் திகழ்வர்.அண்டை வீட்டில் உள்ளவர் முஸ்­லிமாகவும் உறவினராகவும் இருந்தால் அவர்களுக்கு நாம் மூன்று வகையான உரிமைகளை வழங்க கடமைபட்டுள்ளோம். ஒன்று அண்டை வீட்டாரின் உரிமைகள், இரண்டாவது முஸ்­ம்களின் உரிமைகள், மூன்றாவதுஉறவினர்களின் உரிமைகள்.

அண்டை வீட்டார் முஸ்­மாக மட்டும் இருந்தால் அவருக்கு இரண்டு உரிமைகள்வழங்கப்பட வேண்டும். ஒன்று அண்டை வீட்டாரின் உரிமைகள், இரண்டாவது முஸ்­ம்களின் உரிமைகள். அண்டை வீட்டார் முஸ்­மாக இல்லாம­ருந்தால் அவருக்கு அண்டை வீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும்.

''அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். 1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்­மல்லாத அண்டை வீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்­மான அண்டை வீட்டார். இவருக்கு அண்டை வீட்டார் உரிமையும், இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்­மாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டை வீட்டடார் என்ற உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ர­லி) நூல்: தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம்: 7, பக்கம்: 185)


கண்ணியப்படுத்துங்கள்!

நம் வீட்டில் விசேஷங்கள் ஏதும் நிகழ்ந்தால் முத­ல் அண்டை வீட்டாருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். ஆனால் இன்று சின்னப்பிரச்சனைகளால் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வரும்போது, ஊர் முழுக்க அழைப்பு கொடுப்பவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. கொடுத்தாலும் கூட மரியாதை கலந்த அழைப்பாக இருப்பதில்லை. நபிகளார் அவர்கள் இது போன்று நடப்பவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுகிறார்கள்.

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (6019)


இறைவனின் அன்புக்கு அழகிய வழி

''அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புவது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர்,தம் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ர­லி) நூல்கள்: ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம்: 6.


நபிகளாரின் இறுதி அறிவுரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ''நான் அண்டை வீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டுமென வ­யுறுத்துகிறேன்'' என்று அதிகமாகக்கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ர­லி) நூல்: அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ,பாகம்: 8, பக்கம்: 111


யார் முஸ்­லிம்?

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்­மாக இருப்பவன் அண்டை வீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான்.

''உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்! நீ முஸ்­லிமாவாய்''என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: இப்னுமாஜா (4207)


உதவுங்கள்

அண்டை வீட்டார் சிரமப்படும் போது அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்வது,நோயுற்றால் மருத்துவரிடம் கொண்டு செல்வது, நோயுற்ற நேரத்தில் உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்ய வேண்டும். நம் உறவினர்களுக்குச் செய்வதைப் போன்று அவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும். இதைப் பின்வரும் நபிமொழியி­ருந்து விளங்கலாம்.

''அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்குவாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரீ (6014)


குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்

அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும்வழங்க வேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரைச்சேர்த்து அவர்களுக்கும் வழங்க வேண்டும்.

''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­ம் (4758)


அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!

நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது 

நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.

''முஸ்­லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை(அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்)இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (2566)


அன்பளிப்புச் செய்வதில் முத­லிடம்

ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்ய முடியும், குறைவான பொருட்களேஇருக்கின்றன என்றால் அண்டை வீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.

''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில்யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோஅவருக்கு'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரீ (2259)


சிறந்ததைத் தேர்வு செய்யுங்கள்

நம்மிடம் உள்ளதில் எது மட்டமானதோ அல்லது எதைச் சாப்பிட நாம் விரும்பமாட்டோமோ அத்தகைய பொருள்களை அண்டை வீட்டாருக்கு வழங்காதீர்கள்! நல்ல தரமான பொருள்களை வழங்குங்கள். நீங்கள் சாப்பிடுவது சாதாரணமான பொருளாக இருந்தால் அதை வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மட்டமான பொருட்களாகத் தேர்வு செய்து வழங்கக் கூடாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையான வற்றையும், பூமியி­ருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதி­ருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்;புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2: 267)

''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்குவிரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாதவரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: முஸ்­லிம் (71)


தான் மட்டும் வயிறார சப்பிட மாட்டான்

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்கச் சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல! அண்டை வீட்டில் இருப்பவருக்கு வழங்கி விட்டுச் சாப்பிடுவது தான் இறை நம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.
''தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ர­லி) நூல்: அஹ்மத் (367)

'முஸ்னத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூ­ல் அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம்பெற்றுள்ளது.


மரப் பலகை அடித்தல்

பக்கத்து வீடு என்று வரும் போது, அவர்கள் வீட்டைக் கட்டும் போது அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் போது மரக் கட்டைகள் போன்றவற்றை அண்டை வீட்டாரின் சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டைவீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

அண்டை வீட்டாருக்கு மரப் பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என்றும் பெருந்தன்மையுடன்நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபிகளார் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர­) சொல்­ விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்­க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)


வீட்டை விற்றல்

நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முத­ல் அண்டை வீட்டாரிடம்,விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லைஎன்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்ய வேண்டும். இதுவும் அண்டைவீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ர­லி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போதுமிஸ்வர் பின் மக்ரமா (ர­லி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ர­லி) அவர்கள் வந்து ''ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ர­லி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகி­ருந்த மிஸ்வர் (ர­லி) அவர்கள், ஸஅத் (ர­லி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ர­லி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ர­லி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. ''அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்குக் கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக் காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார். அறிவிப்பவர்: அம்ர் பின் ஷரீத் நூல்: புகாரீ (2258)


தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ டேப்ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவுநேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தைஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர்உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டைவீட்டாருக்குத் தொல்லைதரக்கூடாது.

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத்தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரீ (5187)

அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்கமாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்கிறது.

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளி­ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ர­லி), நூல்: புகாரீ (6016)

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மூன்று தடவை அவன் இறைநம்பிக்கையாளன்அல்லன் என்று நபிகளார் கூறியது அண்டைவீட்டாருக்கு தொல்லை தருவது எவ்வளவுபெரிய குற்றம் என்பதை விளக்கிறது. அண்டைவீட்டாருடன் தொடர்ந்து பகைமைபோக்கை கடைபிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாக சிந்திக்கட்டும்.அண்டைவீட்டாருக்கு தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புகமுடியாது என்றகடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.

எவனுடைய நாசவேலைகளி­ருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர்சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் (73)

நல்லறங்கள் பல புரிந்தும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை,நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்குதன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாகஇருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத்துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால்தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்றுகேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அஹ்மத் (9298)

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையி­ருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: அஹ்மத் (12575)


மாபெரும் குற்றம்

அண்டைவீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகளில் அவருக்கு நம்பிக்கைக்குரியவராகதிகழ்வது அவசியமாகும். பக்கத்துவீட்டில் இருக்கிறார், அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்துகொள்ளவேண்டும். அண்டைவீட்டார் வெளியூர் சென்றுவிட்டார் எனவே நாம் அங்குசென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில்ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?''என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்குநீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரியகுற்றம்தான்'' என்று சொல்­விட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­லி), நூல்: புகாரீ (4477)

பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம், அடுத்த நம்பியவர்களுக்கு துரோகம்செய்தல் இன்னொரு குற்றம், இந்த இரண்டும் சேர்ந்து பெரும்பாவமாக மாறிவிடுகிறது.

நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்றுபதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ர­லி), நூல்: அஹ்மத் (22734) 

அதாவது ஒருவர் பக்கவீட்டு பெண்ணிடம் விபச்சாரம் செய்வது (மற்ற) பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையைவிட மிகக் கடுமையானதாகும்.

ஒருவர் பக்கவீட்டில் திருடுவது (மற்ற) பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக்கடுமையானதாகும்.


மறுமையில் முறையிடுவான்

அண்டைவீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராகஅவனின் அண்டைவீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.

தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்,நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி), நூல்: அதபுல் முஃப்ரத் (111)


நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்

மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போதுகூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டைவீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் அவைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும்பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டைவீட்டாருக்குச் சொல்லுதல் என்றுநற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்லவேண்டும்.நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரிங்களில் கூட்டாக செயல்பட்டுள்ளனர். நானும்அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின்ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அதுமதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன். அறிவிப்பவர்: உமர் (ர­லி), நூல்: புகாரீ (89)

திருக்குர்ஆன் அறிவுரைகள்,நபிகளாரின் விளக்கங்களை முறைவைத்து கற்று வந்து நபித்தோழர்களைப் போல் அண்டைவீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளை கேட்டறிந்து தம் அண்டைவீட்டாருக்கும் எடுத்துச் சொல்­ நன்மையில் கூட்டாகவேண்டும்.


அல்லாஹ்விடம் சிறந்தவர்

நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாகஇருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கதுவீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி), நூல்: திர்மிதீ (1867)


நல்ல அண்டைவீட்டார்

நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடுஇருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். நூல்: அஹ்மத் (14830)


தொல்லையை பொறுத்துக் கொள்ளுங்கள்

அண்டைவீட்டார் என்ற வரும்போது சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். அதைபெரிய விசயமாக எடுத்துக் கொண்டு வாழ்நாள் பகைவர்களாக மாறிவிடாதீர்கள்!அவர்கள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு அவருக்கு சரியான அறிவுரைகளைக்கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும். 

ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோஅவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு,சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)


அண்டை வீட்டார் தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகள்

உள்ளத்தின் கோபத்தை போக்கும்

அன்பளிப்புச் செய்யுங்கள்! ஏனெனில் அன்பளிப்பு உள்ளத்தின் கோபத்தைபோக்கிவிடும். ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பின் துண்டை(அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்)இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­), நூல்: திர்மிதீ (2056)

இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் இறுதியில் இதில்இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூமஃஷர் என்பவரை அவரின் நினைவாற்றல் தொடர்பாக பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


வீட்டுப் பொருட்களை வீதியில் எறியுங்கள்

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார்செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று கூறினார்கள். அந்த மனிதர்(மீண்டும்) இரண்டாம் தடவையோ அல்லது மூன்றாம் தடவையோ (புகார் கூற) வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் ''நீர் சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம்வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். நீர் அவர்களிடம் விவரத்தை கூறு! மக்கள் அவரை சபிப்பார்கள், அல்லாஹ்வும் அவ்வறே செய்வான்'' என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, நீர் உம் வீட்டுக்கு திரும்பிச்செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காணமாட்டீர்! என்று கூறினார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அபூதாவூத் (4486)

இச்செய்தியில் இடம் பெற்றியிரும் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரின் நனைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளனர். இவர்நல்லவர் எனினும் அபூஹுரைரா (ர­லி) அவர்களின் செய்தியில் இவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிபிட்டுள்ளார்கள்.( இந்த செய்தியும் அபூஹுரைரா (ர­லி) அவர்கள் மூலமதான் அறிவிக்கப்பட்டுள்ளது.) மேலும் இமாம் முஸ்­ம் அவர்கள் இவரை ஆதாரமக் கொள்ளவில்லை. இவரின் செய்திகளை துணைச் சான்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப், தக்ரீபுத் தஹ்தீப்) மேலும்இவரை பிற்காலத்தில் வந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் அவரின் நினைவாற்றல் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளனர். இவரின் 13 செய்திகனை இமாம் முஸ்­லிம் பதிவுசெய்துள்ளார்கள். இவை அனைத்தும் துணைச்சான்றுகளாகவே கொண்டுவந்துள்ளார்கள்என்று ஹாகிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


பிற்கால சோதனை

என்னுடை இந்த சமுதாயம் எனக்கு பின்னர் சோதனை உட்படுத்தப்படும்.அல்லாஹ்வின் தூதரே! எந்த முறையில் என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அண்டை வீட்டுக்காரன், தன் அண்டைவீட்டுக்காரனின் உரிமை அறிந்திருக்கமாட்டான்என்று கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 2)

இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இமாம் தஹபீ அவர்கள் 'இது (நபிகளார் பெயரில்) இட்டுக்கட்டப்பட்டது' என்று கூறியுள்ளார்கள்.


மறுமைநாளின் அடையாளம்

கெட்ட அண்டைவீட்டான் இருப்பதும் குடும்ப உறவை முறிப்பதும் ... மறுமை நாளின் அடையாளங்களாகும். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 2)

இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் ஹம்சா என்பவர் பலவீனமானவராவார். 
(தக்ரீபுத் தஹ்தீப்)


முஃமினின் அடையாளம்

உன் அண்டை வீட்டாரிடன் நல்லமுறையில் நடந்துகொள்! நீ முஃமினாக ஆகிவிடுவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்:4)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூதாரிக் என்பவர் யாரென அறியப்படாதவர். (தக்ரீபுத் தஹ்தீப்) இவரின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாததால் இச்செய்தி பலவீனமடைகிறது.


அண்டைவீட்டாரின் கடமைகள்

அல்லாஹ்வின் தூதரே! என் அண்டைவிட்டாருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்று கேட்டேன்? அதற்க ''அவன் நோயுற்றால் அவனை நோய்விசாரிக்கச் செல்வது, அவன் இறந்து விட்டால் அவனை பின்தொடர்வது (அதாவது அவனின் ஜனாஸாவை பின்தொடர்வது), அவன் கடன் கேட்டால் கடன் கொடுப்பது, அவன் தவறுசெய்தால் அதை (மற்றவர்களுக்கு தெரியாமல்) மறைப்பது,அவனுக்கு நன்னை ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவது, சோதனை ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்ளச் செய்வது, மேலும் உனது கட்டடத்தை அவனுக்கு காற்று செல்லாமல் இருக்கும் வகையில் கட்டாமல் இருப்பதாகும். மேலும் உன் சட்டியின் (கறி) வாசனையால் அவனுக்கு தொல்லை தராதே! எனினும் ஒரு கையளவு அதி­ருந்து அவனுக்கு கொடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 4)

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபூபக்ர் அல்ஹுதலீ என்பவர்ஹதீஸ்துறையில் கைவிடப்பட்டவர், பலவீனமானவர்(தக்ரீபுத் தஹ்தீப்) மேலும் இமாம் தஹபீ அவர்களும் அதே நூ­ல் இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அண்டைவீட்டாரின் உரிமை பற்றி உங்களுத் தெரியுமா? அவன் உதவி தேடினால்அவனுக்கு நீ உதவுவது, கடன் கேட்டால் கடன் தருவது, அவன் வறுமையை அடைந்தால் அதை நீ நீக்குவது, அவன் நோயுற்றால் நீ நோய்விசாரிக்கச் செல்வது,அவனின் அனுமதி இல்லாமல் அவனுக்கு காற்று செல்லா வண்ணம் கட்டடத்தை உயர்த்தாமல் இருப்பதாகும். பழங்களை வாங்கினால் அவனுக்கு நீ அன்பளிப்புச் செய்! இல்லையெனில் இரகசியமாக அதை கொடுத்துவிடு, அவனின் குழந்தை கோபமூட்டும் வகையில் உன் குழந்தை, இந்த பழத்தை வெளியில் கொண்டு செல்லாமல் இருக்கட்டும். அவனுக்கும் ஒருபிடி கொடுக்காமல் உன் சட்டியின் கறிவாசனை அவனை தொல்லை தராமல் இருக்கட்டும் என்று கூறிய நபிகளார்,என்னை அவர்களுக்கு வாரிசாக்கிவிடுவார்களோ என்று நான் எண்ணும் அளவிற்கு அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடக்கும்படி தொடர்ந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் வ­யுறுத்திக் கொண்டே இருந்தார்கள் என்று கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 4)

இமாம் தஹபீ அவர்கள் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஸுவைத் பின் அப்துல் அஸீஸ்என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். மேலும் இதே கருத்து முஆவியா (ர­லி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியாகும் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அண்டைவீட்டார்களின் உரிமை என்ன? என்றுநபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவன் அழைத்தால் அதற்கு நீ பதிலளிப்பதும்,அவன் உதவி தேடினாôல் உதவி செய்வதும், அவனுக்கும் ஒருபிடி கொடுக்காமல் உன் சட்டியின் கறிவாசனை அவனை தொல்லை தராமல் இருப்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள பதிலளித்தார்கள். (நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 5)

இதன் தொடரில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் பலவீனமானவர் என்று இந்த செய்தியின் இறுதியில் இமாம் தஹபீகுறிப்பிட்டுள்ளார்கள்.


போருக்கு வரக்கூடாது

ஒரு போருக்கு நபி (ஸல்) அவர்கள் செல்லும் போது, யார் அண்டைவீட்டாருக்குதொல்லை கொடுத்தாரோ அவர் நம்முடன் சேரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: அல்முஃஜமுல்அவ்ஸத்லிதப்ரானீ, பாகம்: 9, பக்கம்: 181)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் என்பவர் பலவீனமானவர் (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்)


நம்மை சார்ந்தவன் இல்லை

யார் அண்டைவீட்டில் ஒரு மனிதனின் அந்தரங்கத்தையோ அல்லது ஒரு பெண்ணின்முடியையோ அல்லது அவளின் உட­ல் ஏதோவது ஒரு பகுதியையோ எட்டிப் பார்த்தால் பெண்களின் அந்தரங்தத்தை தேடிஅலையும் நயவஞ்சகர்களுடன் நரகத்தில் நுழையவைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும். அவனை கேவலப்படுத்தாமல் இவ்வுலகத்தி­ருந்து அல்லாஹ் வெளியேற்றமாட்டான். யார் அநியாயமாக அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருவானோ அவனுக்கு சுவர்க்கத்தை தடைசெய்துவிடுகிறான். நரகத்தை தங்குமிடமாக ஆக்கிவிடுவான். தம்குடும்பத்தினரை விசாரிப்பது போல் அண்டைவீட்டாரின் உரிமையைப் பற்றி அல்லாஹ் விசாரிப்பான். யார் அண்டைவீட்டாரின் உரிமையை வீணாடித்திருப்பானோ அவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: அல்மதா­புல் ஆ­ய்யா, பாகம்: 7, பக்கம்: 423)

இச்செய்தியில் இடம் பெறும் மைஸரா பின் அப்து ரப்பிஹி என்பவர் நபிகளார் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர். இந்த செய்தி பதிவு செய்த ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்த செய்தியின் இறுதியேலே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


தொல்லை தராதே!

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர்இருக்கும் இடத்தில் நான் தங்கினேன். ஆனால் பக்கத்தி­ருந்த அண்டைவீட்டார்கள் எனக்கு மிகவும் கடுமையாக தொல்லைகளை தந்தார்கள் என்று கூறினார். உடன் நபிகளார் அவர்கள் அபூபக்ர் (ர­லி), உமர் (ர­லி), அலீ (ர­லி) ஆகியோரை அனுப்பி அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துவர அனுப்பினார்கள். அவர்கள் பள்ளியின் வாச­ல் நின்றார்கள். அப்போது, ''அறிந்து கொள்ளுங்கள்! நாற்பது வீடுகள் அண்டைவீடாகும். எவரின் நாசவேலைகளி­ருந்து பக்கத்துவீட்டார் பயப்படுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்லமுடியாது'' என்று சப்தமிட்டுகூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மா­க் (ர­), நூல்: அல்முஃஜமுல் கபீர் லி தப்ரானீ, பாகம்: 19, பக்கம்: 73)

இந்த செய்தியில் இடம் பெறும் யூசுஃப் பின் அஸ்ஸஃபர் என்பவர் கடுமையாகவிமர்சனம் செய்யப்பட்டவர். இவர் பொய் சொல்லுபவர் என்று தாரகுத்னீ அவர்களும் இவரை எந்த நிலையில் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இப்னுஹிப்பான் அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: அல்லுஅஃபாவுல் வல்மத்ரூகீன்லிஇப்னுல் ஜவ்ஸீ பாகம்: 3, பக்கம்: 220)


அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் செய்பவன்

யார் தன் அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவானோ அவன் எனக்குத் தொல்லைதந்துவிட்டான், யார் எனக்கு தொல்லை தந்தானோ அவன் என்னுடன்பேரிட்டுவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹக்குல் ஜார்,பக்கம்: 2)

இதில் இடம் பெறும் இஜ்ண்டாவது அறிவிப்பாளர் அப்பாத் பின் பஷீர் என்பவர் அனஸ் (ர­) அவர்கள் மூலமாக பொய்யான செய்திகளை கூறுபவர் என்று இமாம் தஹபீ அவர்கள் தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூ­ல் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த செய்தியின் இறுதியிலும் இது மறுக்கப்படவேண்டிய செய்தி என்று கூறியுள்ளார்கள்.

இதே செய்தி வேறு நூ­லும் இடம் பெற்றுள்ளது.

யார் தன் அண்டைவீட்டாருக்கு தொல்லை தருவானோ அவன் எனுக்கு தொல்லைதந்தவனாவான், எவன் எனக்கு தொல்லை தந்தானோ அவன் அல்லாஹ்வுக்கு தொல்லை தந்தவனாவான், எவன் தன் அண்டைவீட்டாருடன் போர்புரிவானோ (சண்டையிடுவானோ) அவன் என்னிடம் போர்புரிபவனாவான். எவன் என்னிடம் புரிந்தானோ அவன் அல்லாஹ்விடம் போர்புரிந்தவனாவான் என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­), நூல்: தவ்பீக்

இந்த செய்தியை அபூஷைக் இப்னு ஹிப்பான் என்பவர் தனது கிதாபுத் தவ்பீக் என்ற நூ­ல் பதிவு செய்திருப்பதாக 'அத்தர்கீபுத் வத்தர்ஹீப்' என்ற நூ­ன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தவ்பீக் என்ற நூல் நம்மிடம் இல்லாததால் அதன் அறிவிப்பாளர் வரிசையை சரிகாணமுடியவில்லை. 'அத்தர்கீபுத் வத்தர்ஹீப்' என்ற நூ­ன் ஹதீஸ்களை ஆய்வு செய்த ஷைக் அல்பானீ அவர்கள் இந்த செய்தி பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற விவரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.


மோசமான மூன்று நபர்கள்

மூன்று நபர்கள் மிகவும் மோசமானவர்களில் உள்ளவர்கள். 1. நீ நல்லது செய்தால் உனக்கு நன்றி செலுத்தாத, நீ தவறிழைத்தால் மன்னிக்காத தலைவன் 2. நல்லதை கண்டால் அதை மறைத்து, (உன்னிடம்) தீயதைக் கண்டால் பரப்பிவிடும் அண்டைவீட்டுக்காரன். 3. நீ இருந்தால் உனக்கு தொல்லை தந்து நீ இல்லாத நேரத்தில் மோசடிதனத்தில் (விபச்சாரத்தில்) ஈடுபடும் மனைவி என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ர­லி), நூல்: அல்முஃஜமுல் கபீர்லி தப்ரானீ, பாகம்: 18, பக்கம்: 318)

இச்செய்தியில் இடம் பெறும் முஹம்மத் பின் இஸாம் பின் யஸீத் என்பவர் யாரெனஅறியப்படாதவர். (நூல்: மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 8, பக்கம்: 168)

இதே கருத்தில் ''மூன்று நபர்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்... வாசகம் கூடுதலாக அபூஹுரைரா(ர­) அறிவிக்கும் செய்தி 'மீஸானுல் இஃதிதால்' என்ற நூ­ல் இடம் பெற்றுள்ளது. எனினும் அதுவும் பலவீனமானதாகும். அதில் அஷ்அஷ் பின் பர்ராஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று அதே நூ­ல் அதே இடத்தில் கூறப்பட்டுள்ளது. (மீஸானுல் இஃதிதால் பாகம்: 1, பக்கம்: 325)


ஆடை வழங்காதவன்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்குஆடைஅணிவியுங்கள் என்று கேட்டார். நபிகளார் அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் (திரும்பவும்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆடைஅணிவியுங்கள் என்று கேட்டார். அப்போது 'உமக்கு, 'இரண்டு உபரியான ஆடைகள் உள்ள அண்டைவீட்டார் உள்ளாரா?' என்று நபி (ஸல்) அவர்கள கேட்டார்கள். ஆம். ஒன்றுக்கும் மேற்பட்டவை உள்ளது என்றார். அதற்கு 'உம்மையும் அவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில்ஒன்றுசேர்க்கமாட்டான்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் , தப்ரானீ, பாகம்: 7, பக்கம்: 170)

இச்செய்தியில் இடம் பெறும் அல்முன்திர் பின் ஸியாத் என்பவர் நபிகளார் பெயரில் பொய்யான் செய்திகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் (நூல்: ­ஸானுல் மீஸான் பாகம்: 6,பக்கம்: 89)

நன்றி: துபை TNTJ