வியாழன், 19 பிப்ரவரி, 2015

மனத் தூய்மை

மனத் தூய்மை

மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்த மனத்தூய்மை இன்று முழுமையாக மறையத் துவங்கியுள்ளது. அடுத்தவர் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற உலக நோக்கத்தை மையமாகக் கொண்டு மக்கள் செயல்படத் துவங்கியுள்ளனர். 

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை படைத்த வனிடம் மட்டுமே கூ­யை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும். அவன் கட்டளையிட்டதால் தான் இதைச் செய்கிறோம் என்ற எண்ணமும் இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகின்றது. 

ஆனால் இன்று திருக் குர்ஆனைப் படிப்பதும், படித்துக் கொடுப்பதும், தொழுவதும், தொழ வ­யுறுத்துவதும் உலக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. தன்னை அறிஞனாகக் காட்டிக் கொள்வதற் காகவும், புகழுக்காகவும் இவற்றைச் செய்கின்றனர். படித்த கல்வியின் உண்மையான போதனையை எடுத்துச் செயல்படுத்துவதில்லை. மேலும் தர்மங்களைச் செய்பவர்கள், மற்றவர்கள் புகழ்வதற் காகவும் அதன் மூலம் சொந்த இலாபங்களை அடைவதற்காகவும் செய்கின்றனர். 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற் காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264) 

மறுமை நாளை நம்பாதவனே, தான் செய்யும் தர்மங்களைச் சொல்­க் காட்டுவான், அதன் மூலம் தொந்தரவு செய்வான் என்ற திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் இறை நம்பிக்கையாளனின் நடவடிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதை வல்ல அல்லாஹ் தெளிவு படுத்திக் காட்டியுள்ளான்.


இறையில்லத்தைக் கட்டிக் கொடுப்பது, அல்லது பொதுச் சேவை நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்குவது ஆகிய நற்காரியங்களைச் செய்து விட்டு அதன் மூலம் உலக ஆதாயங்களை எதிர்பார்ப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. தன்னைத் தலைவராக, அல்லது செயலாளராக அல்லது வேறு முக்கியப் பொறுப்புகள் தருமாறு கேட்பது, அல்லது தான் சொன்ன படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இவை இன்று நடக்கும் அவலங்கள். இவ்வாறு செய்பவர்கள் இறைவனின் கூற்றுப்படி நன்மையை இழந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
எவ்வளவு பெரிய கஷ்டமான காரியங்களைச் செய்தாலும் அதில் மனத்தூய்மை இல்லாமல் போனால் அந்தக் கஷ்டத்திற்கு வல்ல அல்லாஹ்விடம் மறுமை நாளில் எந்தப் பலனும் இல்லாமல் போய் விடும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகப் பெரிய தியாகமாக இருந்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் சம்பவத்தைப் பற்றி நபிகளார் இவ்வாறு கூறுகின்றார்கள். 

அமல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே! எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக் காகவும் அவனது தூதருக்காகவும் அமையுமோ அது அல்லாஹ்வுக் காகவும், அவனது தூதருக்காகவும் செய்த ஹிஜ்ரத்தாக அமையும். எவருடைய ஹிஜ்ரத் உலக நோக்கத்தைக் கொண்டதாகவோ, அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகவோ இருந்தால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதற்காகவே அமையும். (நூல்: புகாரி) 

சொந்த நாட்டை விட்டு, குடும்பத்தை விட்டு நாடு துறந்து போனாலும் எண்ணம் சரியில்லை என்றால் அதற்கு மறுமையில் எந்தக் கூ­யும் இல்லை என்பதைத் தெளிவுபட நபிகளார் கூறியுள்ளார்கள். எனவே நாம் செய்யும் அமல்களை இறைவனுக்காக மட்டும் செய்து மறுமையில் நிறைவான கூ­யைப் பெறுவோம். 

அல்லாஹ் உங்கள் உடல்களையோ, உங்கள் உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளத்தையும் அமல்களையும் மட்டுமே பார்க்கிறான். (நூல்: முஸ்­லிம்)