ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

பணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்புப்பணி

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல இணைச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில், அச்சகோதரர்கள் அதிகமாக வேலைப்பார்க்கும் சைட்டுகளுக்கு சென்று, அவர்களுடைய சிறு ஒய்வு இடைவெளி நேரத்தின் போது அவர்களை சந்தித்து, சிந்திக்க தூண்டும் வகையிலே பேசி, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் எடுத்து கூறி வருகிறார்.

கடந்த வாரம் பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் இலங்கை (சிங்கல) சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள், கையேடுகள், சிடிக்கள் வழங்கப்பட்டது.

உங்களது மற்றும் உங்களுக்கு தெரிந்த பணியிடங்களில் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அழைப்புப்பணி செய்ய சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களை +974 7771 2568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அல்ஹம்துலில்லாஹ்.