சனி, 5 செப்டம்பர், 2009

குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி


03-09-09 வியாழன் இரவு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் , மதீனா-கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கசில் ,இரவு 10:30 மணிக்கு துவங்கியது.இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் முன்னராக , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலீ அவர்கள் நடத்தினார்கள் .இப்போட்டிக்கு , ஆறு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் ஒரு பிரிவாகவும் , பத்து வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மற்றொரு பிரிவாகவும் , பதினாலு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மூன்றாவது பிரிவாகவும் வகைபடுத்தபட்டிருந்தனர். இப்போட்டியில் கலந்து கொள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெயர் பதிவு செய்திருந்தனர்.


இப்போட்டிகளை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் , குழந்தைகளிடம் கேள்வி கேட்டு , இஸ்லாத்தில் அறிய வேண்டிய பல எளிய விசயங்களை சிறுவர் சிறுமியர் மூலமாக பார்வையாளர்களை அறிய தந்த விதம் வெகுவாக கவர்ந்தது. இப்போட்டியில் மதீப்பீட்டர்களாக மௌலவி அன்ஸார் அவர்களும் ,மௌலவி அசலம் அவர்களும் சகோதரர் பீர் முஹம்மது அவர்களும் செயலாற்றினார்கள்.