திங்கள், 23 மே, 2011

QITC செயற்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால்,QITC செயற்குழு கூட்டம் 20/05/2011 வெள்ளி அன்று இரவு  7:00 மணி முதல் 10:00 மணி வரை , QITC மர்கசில், QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவீ.அன்சார் அவர்கள், "தாவாப்பணிக்கு தாருங்கள்"  என்ற தலைப்பில்,உறுப்பினர்களுக்கு எழுச்சி உரை ஆற்றினார்கள்.


QITC பொது செயலாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள், "QITC யின் செயல்பாடுகள்" குறித்து மிகவும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

QITC  பொருளாளர் சகோ.பீர் முஹம்மது அவர்கள், "TNTJ நிதிச்சுமை-தனிக்கவனம் தேவை" என்ற தலைப்பில் உறுப்பினர்களுக்கு புள்ளிவிவரங்களுடன் வேண்டுகோள் விடுத்தார்கள்.
QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள்,"மர்கஸ் மாத சந்தா மற்றும்  உணர்வு-ஏகத்துவம்-தீன்குலப்பெண்மணி சந்தாக்கள்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை முடுக்கிவிட்டார்கள்.பின்பு,கத்தர் மண்டல  நிர்வாகிகளையும், புதிய கிளை பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். 


பின்பு,கீழ்கான் பொருட்கள் குறித்து உறுப்பினர்களிடம் விளக்கமாக பேசி,அவற்றுக்கான ஒப்புதல் வாங்கப்பட்டது.
1.ரமதான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள்.
2.ரமதான் மாதத்தில் செயல்படவேண்டிய சிறப்பு குழுக்கள்.
3.QITC பய்லா.

இறுதியில்,உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தலைவரும், பொது செயலாளரும் ,பதிலளித்தனர்.
இறுதியாக,QITC  துணைத்தலைவர், சகோ.ஜியாவுதீன் அவர்கள்,'நன்றியுரை' நவில ,துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!
=========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com
வலைப்பூ:www.qatartntj.blogspot.com