திங்கள், 28 ஜனவரி, 2013

"விஸ்வரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல அமைப்பாகிய கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

27-01-2013 ஞாயிறு காலை சுமார் 10:00 மணி அளவில், கத்தர் மண்டல இணைச்செயலாளர் சென்னை சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில், ஆத்தூர் மவ்லவி, அப்துஸ்ஸமத் மதனீ, பண்டாரவாடை சகோதரர். சபீர் அஹ்மத், சமயபுரம் சகோதரர். காதர் மீரான் ஆகியோர் அடங்கிய குழு, கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத் துறை (ஃபனார்) யின் இயக்குநர் - கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஃபஹத் பின் உக்ளா அல்-ருவைலி அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு உரிய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர். ஃபஹத் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு 'இந்த தகவலை நீங்கள் மட்டும் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கூறி, நமக்காக பிரார்த்தனையும்' செய்தார். சந்திப்பின் போது ஃபனாரின் மேற்பார்வையாளர் - ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள் உடனிருந்தார்கள்.

பிறகு, இக்குழு, காலை சுமார் 11:30 மணி அளவில், கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சகம் சென்று, அங்கு ஊடகக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக்கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு 'கத்தர் அரசு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தை' தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர்.ஜாபிர் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எதிர்காலத்தில் இதைப்போல் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் உடன் கொண்டு வாருங்கள் - ஆவண செய்கிறேன் என்று கூறி நமக்காக பிரார்த்தனையும்' செய்தார்.

அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!