செவ்வாய், 1 டிசம்பர், 2015

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -7)

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.

இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர் என்பதை வரிசையாகப் பார்த்தோம்.

இது யூத, ஷியா, சு.ஜ. அணியினர் இறைக் கொள்கையில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். இந்த அணியினர் இறைத் தூதர் குறித்த கொள்கை விஷயங்களில் காட்டுகின்ற விளையாட்டைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுகின்ற இறைத்தூதர்களை இழிவுபடுத்துவது, அவர்களைக் கொலை செய்வது போன்றவையெல்லாம் யூதர்களுக்கு சகஜமான ஒன்று! இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

"மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறிய போது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 2:61

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் யூதர்களின் இந்தச் செயல்பாட்டை, இவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கின்றனர்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவரது இந்த வார்த்தைகளின் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெறும் மூஸா, கிழ்ர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை முழுமையாக நாம் பார்ப்பது அவசியம்.

மூஸா, கிழ்ர் சம்பவம்

அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.

"இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது "காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்)கூறினார்.

"அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

"உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?'' என்று அவரிடம் மூஸா கேட்டார்.

"என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?'' என்று (அந்த அடியார்) கூறினார்.

"அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது'' என்று (அந்த அடியார்) கூறினார்.

இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!'' என்று (மூஸா) கூறினார்.

இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். "எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்'' என்று (மூஸா) கூறினார்.

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்று இருக்கலாமே'' என்று (மூஸா) கூறினார்.

"இதுவே எனக்கும் உமக்கும் இடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்'' என்று அஞ்சினோம்.

"அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்'' என நினைத்தோம்.

அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே!'' (என்றார்)

அல்குர்ஆன் 18:59-82

இந்த வசனங்கள் மூஸா (அலை), கிழ்ர் தொடர்பான சம்பவத்தைப் பற்றிக் கூறுகின்றன. புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இந்த வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?'' என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "நானே மிகவும் அறிந்தவன்'' என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் "(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

எனவே அல்லாஹ் "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான். மூசா(அலை) அவர்கள் "என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?'' என்றுகேட்டார்கள். அதற்கு, "கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துவிட்(டுச் சென்று விட்)டது. மூசா (அலை) அவர்களுக்கும், அன்னாருடைய உதவியாளருக்கும் (அந்தப் பாதை) வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும், இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர்.

மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் "நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்றார்கள். தமக்குக் கட்டளையிடப் பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர் "நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே! பார்த்தீர்களா? அங்கே தான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது'' என்றார். மூசா (அலை) அவர்கள், "நாம் தேடி வந்த இடம் அது தான்'' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச்சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே, முழுவதுமாக ஓர் துணியால், அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் (கிழ்ர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்?)'' என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் தான் மூசா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?'' என்று கேட்டார்.

மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்று பதிலளித்துவிட்டு, "உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமை யாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்றார்கள்.

இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள், தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (மரக்கல உரிமையாளர்களால்) கிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப் பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.

அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூசா(அலை) அவர்களிடம் கிழ்ர் (அலை) அவர்கள் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்று கூறினார்கள்.

(சற்று நேரம் கழிந்ததும்) கிழ்ர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்)பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து) விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் "நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமல் ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.

(பிறகு இருவரும் மரக்கலத்தில் இருந்து வெளியேறி கடலோரமாக) நடந்து போய்க்கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் சில இளைஞர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் "ஒரு பாவமும் செய்யாத உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?'' என்று கேட்டார்கள். மீண்டும் இருவரும்(சமாதானமாகி) நடந்தார்கள்.

இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) கிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள். கிழ்ர் (அலை) அவர்கள், "இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்'' என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) நபி (ஸல்) அவர்கள், "மூசா பொறுமையாக இருந்திருப்பார் என்றால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப் பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 122

இந்தச் சம்பவத்தில் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்ற கிழ்ரின் உதாரணம் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

அல்லாஹ் தான் மிகவும் தெரிந்தவன்; அறிந்தவன் என்று கூறுவதற்குப் பதிலாக, "நானே மிக அறிந்தவன்' என்று மூஸா (அலை) கூறி விட்டார்கள். உண்மையில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் அன்றைய தினம் மூஸாவைத் தவிர்த்து அறிவில் சிறந்தவர் வேறு யாருமில்லை தான். அதனால் யதார்த்தமாக, தன்னை அறிந்தவர் என்று குறிப்பிட்டது சரியானது தான். என்றாலும் இதில் ஆணவம் தொனிக்கின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்கவில்லை.

அதனால் அவர்களை கிழ்ரைச் சந்திக்கச் செய்கின்றான். அவ்வாறு சந்திக்கச் செல்கின்ற போது வழியில் அவர்களுக்கு மறதி ஏற்படுகின்றது. இந்த மறதியை அல்லாஹ்வே அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு மறதி உடையவர் எவ்வாறு மிகவும் அறிந்தவராக முடியும்? என்பதை உணர்த்துகின்றான். இதற்குப் பின்னால், மூஸா (அலை) அவர்கள் தாம் குறிப்பிட்ட அந்த வார்த்தைக்காக மிகக் கடுமையான முறையில், திரும்பத் திரும்ப கிழ்ர் அவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இருவரும் கற்ற கல்வி, இந்தச் சிட்டுக் குருவி தனது அலகினால் கடலில் அள்ளிய தண்ணீரின் அளவு தான் என்பதை மூஸாவிடம் கிழ்ர் அவர்கள் அடக்கத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

ஆணவத்தை, அகந்தையை அடித்து நொறுக்குகின்ற இந்தச் சம்பவத்திலிருந்து அடக்கத்தை, பணிவைப் பெறுவதற்குப் பதிலாக ஷியாக்கள் மேலும் ஆணவத்தைப் பெறுகிறார்கள். இதிலிருந்து தங்களின் மூலம் யூதயிஸம் தான் என்பதைத் தெளிவாகஉணர்த்துகின்றனர்.

கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும்கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனப்படி யூதர்கள் பொதி சுமக்கும் கழுதைகள்! தான் சுமக்கும் சுவடிகளிலிருந்து அவை எதையும் அறிவதில்லை. இது யூதர்களின் நிலை!ஷியாக்களும் அதே நிலையைத் தான் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கும் குர்ஆனின் இந்தப் போதனைகள் புரியவில்லை.

அதனால் தான் படிப்பினையும், பாடமும் பெற வேண்டிய இந்தச் சம்பவத்தின் மூலம் அதற்கு நேர் மாற்றமான ஒரு விஷக் கருத்தை அள்ளி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளிலேயே விஷச் சிந்தனையைக் கலக்கும் இவர்கள், அவனது தூதரின் விஷயங்களில் விஷத்தைக் கலக்காமல் இருப்பார்களா?

இதைப் போன்ற கருத்து ஷாதுலிய்யா ராத்திபு கிதாபுகளிலும் உள்ளது. அதை இனி பார்ப்போம்.