சனி, 14 ஜனவரி, 2012

QITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 13-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 26 வாரங்களாக இவ்வகுப்பை நடத்தினார்கள்.இதில் இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 

இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக அரபு மொழி இலக்கண வகுப்பு இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஆரம்பமாகும் என்றும் QITC தலைவர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள் அறிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.