QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம்
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் மர்கசில் கடந்த 29/05/2015 அன்று பெண்கள் சிறப்பு பயான் மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜுபைதா அவர்கள் "ரமலான் சிறப்பு " என்ற தலைப்பிலும்,
சகோதரி ரஹானா அவர்கள் "பிறர் மானம் காப்போம்" என்ற தலைப்பிலும்,
சகோதரி ஷமீனா அவர்கள் "தர்மத்தின் விளைவுகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,
அதனை தொடர்ந்து பெண்களுக்கான தஃவா ஆலோசனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ...