சனி, 4 மே, 2013

அல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 02-05-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ, அவர்கள் "குர்ஆன் கலை பாகம் - 2" என்ற தலைப்பில் குர்ஆன் கூறும் சம்பவங்களை முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள் பற்றி உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.