வியாழன், 2 மே, 2013

கத்தர் மண்டலத்தில் மருத்துவமனைகளில் பிறமத சகோதரர்களுக்கு தாவா

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டலத்தில் 29/4/2013 அன்று மதியம் QITC யின்  துணைச் செயலாளர் சகோதரர். அப்துர் ரஹ்மான் மற்றும் QITC யின் மண்டல பேச்சாளர் மௌலவி. மனாஸ் பயானி அவர்களும் தோஹா H.M.C. ஹமத் மருத்துவமனை   சென்று நோயாளிகளிடம் நலம் விசாரிப்புடன் அழைப்புபணி  செய்தார்கள்.  அதில் தஞ்சாவூறை சேர்ந்த சகோதரர். கோவிந்தராஜ் என்பவரை சந்தித்து அவருக்கு இஸ்லாமிய ஓரிறை கொள்கையை எடுத்து கூறினார்கள். மற்றும் இலங்கை - புத்தளத்தை சேர்ந்த சகோதரர். மிஸமில் அவர்களை சந்தித்து நோய் நலம் விசாரித்தனர்.

கோவிந்தராஜ் என்ற பிறமத சகோதரருக்கு கிட்னியில் கல் இருந்து அறுவைசிகிச்சை செய்யபட்டுள்ளார். அவருடைய போன் நம்பர்: +974 77448379 (ரூம் நம்பர்: 434). மற்றவர் கை உடைபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளர்.

மேலும், அன்றைய தினம் மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு வக்ராபகுதியில் அமைந்துள்ள ஹமத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்யாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரைச் சேர்ந்த பிற மத சகோதரர். அஷ்வின் அவர்களை QITC துணைத்தலைவர் சகோதரர். ஃபக்ருதீன் அலி அவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து அவருக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை பற்றி எடுத்து கூறி தாவா செய்து நபிகளாரின் நற்போதனைகள், லாஇலாஹ இல்லல்லாஹ் விளக்கம் போன்ற புத்தகங்களை வழங்கினார்.

அல்ஹம்துலில்லாஹ்!