ஞாயிறு, 23 ஜூன், 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20/06/2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20-06-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் டாக்டர் அஹமத் இப்ராஹீம் அவர்கள் "சஹாபாக்களின் வரலாறு" என்னும் தொடர் தலைப்பில் இக்ரிமா (ரலி) அவர்களைப் பற்றி உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "மறுமை நாள் நெருங்கிவிட்டது" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "உறவுகள் பலம் பெற" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் வரும் வியாழன் நடைபெறவிருக்கும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" பற்றியும், அதை தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் 28-06-2013 வெள்ளிகிழமை நடைபெறவிருக்கும் பிற மத சகோதரர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி பற்றியும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல செயலாளர் சகோதர் முஹமத் அலி அவர்கள் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.