திங்கள், 30 ஜூலை, 2012

வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி - 26/07/2012

ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியான அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்க சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 26/07/2012 வியாழக்கிழமை இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்து இரவு 9:30 மணி முதல் அதிகாலை 4:௦௦ மணிவரை மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சகோதரர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மண்டல செயலாளர் சகோதரர். முகமத் அலி Misc அவர்கள் "சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி"யினை நடத்தினார்கள், நடுவர்களாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ்ஸமத் மதனீ,அவர்களும் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்களும் இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

சிறுவர், சிறுமியர், அவர்களின் வயது அடிப்படையில் மூன்று பிரிவாக பிரித்து போட்டி நடைபெற்றது. குர்ஆன் சிறிய சூராக்கள் ஓதுதல், துஆ, மற்றும் பேச்சுப்போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 25 க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மார்க்க அறிவுப்போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் பங்கெடுத்ததற்கான பரிசுகள் வழங்கப்பட்டது, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அடுத்த ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியான சவூதி மர்கஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது (பரிசளிப்பு நிகழ்ச்சி). 

அடுத்ததாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் "அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இருமனம் இணைந்த நறுமணம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் திருமணம் எதற்காக முடிக்கவேண்டும் திருமணம் முடிக்க எப்படிப்பட்ட பெண்ணை தேடவேண்டும், எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள்.

மண்டல துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். வக்ரா கிளையின் பொறுப்பாளர் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 350 க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக அமைய தொண்டரணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்கள்.திருக்குர்ஆன், ஹதீஸ்கிரந்தங்கள், மார்க்கவிளக்க நூல்கள், குறுந்தகடுகள், உணர்வு, தீன்குலப்பென்மணி, ஏகத்துவம் அடங்கிய புத்தக அரங்கம் அமைக்கப்படிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.