ஞாயிறு, 1 ஜூலை, 2012

கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம் 29-06-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

மாதந்தோறும் நடைபெறும், கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 29-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜூலை மாத வியாழக்கிழமைகள் பயான் பட்டியல், ஜூலை மாத வெள்ளிக்கிழமைகள் பயான் பட்டியல், வாசிக்கப்பட்டது. இனி வரும் வியாழக்கிழமைகள் பயான் மட்டும் இல்லாமல் ஜனாஸா தொழுகை பயிற்சி மற்றும் இதரமுக்கியமான கொள்கை குறித்த பயிற்சிகள், தர்பியா நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் இன்னும் பல அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல த'அவா குழு ஒருங்கிணைப்பாளர் சகோதரர். முகமது அலி Misc அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பதினான்கு பேர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.