ஞாயிறு, 1 ஜூலை, 2012

கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், 29-06-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 29-06-2012 வெள்ளிக்கிழமை இரவு 9:45 மணி முதல் 11:30 மணி வரை, மண்டலச் செயலாளர் முகமது அலி Misc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளின் வருகைப்பதிவேடு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ரமலான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், ரமலான் சிறப்பு நிகழ்சிகளுக்கு பல்வேறு குழுக்கள் அமைத்தல், குழுக்களுக்கு தலைவர்கள் நியமித்தல் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.