திங்கள், 30 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி28 /07 /2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாதம் முழுவதும் ஷைக் ஈத் சாரிட்டியும், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) இணைந்து தினந்தோறும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் .எம் எம் சைபுல்லாஹ் அவர்கள் தொடராக சிற்றுரை ஆற்றிவருகிறார்கள். இன்று 28 /07 /2012 சனிக்கிழமை இப்தார் நிகழ்ச்சியில்  "சுவர்க்கம் செல்ல எளிய வழிகள்" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !