ஞாயிறு, 8 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும்  கிருபையால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கத்தர் மண்டல கிளையில் 05-07-2012 வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு  இராமநாதபுரம் மாவட்டம்   இந்து ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த வீரமணி மாணிக்கம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.

அவருக்கு சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கத்தை சொல்லிகொடுத்தார்கள்  தனது பெயரை முஹமத் என்று மாற்றிகொள்வதாக அறிவித்தார். அவர்  பணியாற்றும் வீட்டின் முதலாளி அவரை நம்முடைய மர்கசிற்கு அவரை அழைத்து வந்தார். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே, அல்ஹம்துலில்லாஹ்!