ஞாயிறு, 1 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப் போட்டி 29/06/2012

அல்லாஹுவின் அருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" மற்றும் மார்க்க அறிவுப்போட்டி மண்டல [QITC] மர்கசில் 29-06-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை சகோதரி அஷ்ரப் நிஷா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. ஹாஜிரா அவர்கள் "தர்மம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "நோன்பின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக "ரமலான் மற்றும் தர்மம்" என்ற தலைப்புகளில் மார்க்க அறிவு போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.