திங்கள், 9 மார்ச், 2015

இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை

இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை

இறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எது எதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது. 


இறந்தவருக்காகத் தர்மம் செய்யலாம் 

இறந்தவருக்காக உயிருடன் இருப்பவர் தர்மத்தைச் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது. 

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்லறம் (தான தர்மம்) செய்திருப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1388) 

சஅத் பின் உபாதா அவர்கள் வெüயே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்கüடம், ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெüயே 

சென்றிருந்த போது மரண மடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனüக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''ஆம் (பயனüக்கும்)'' என்று பதிலüத்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (2756) 


இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்யலாம் 

மரணித்தவர் விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் நல்ல வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ்விடம் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். 

மரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது இவர் விசாரனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார். 

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)நூல் : அபூதாவுத் (2804) 

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் ''அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்ஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்'' என்று ஓதுவதை நான் செவியுற்றேன். 

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப் படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.) 

அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன். 

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)நூல் : முஸ்லிம் (1757) 


இறந்தவருக்காக கடமையான நோன்பை நோற்றல் 

இறந்தவர் மீது கடமையான நோன்பு அல்லது நேர்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீதிருந்த சுமை நீங்கிவிடுகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1952) 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (1953) 


இறந்தவர் சார்பில் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதல் 

இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செயயாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம். அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீதிருந்த ஹஜ் கடமை நீங்கிவிடுகிறது. 

'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்!' என்றார்கள். இது 'விடைபெறும்' ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது. 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (1513) 

(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (6699) 


இறந்தவர் விட்டுச் சென்ற கடனை நிறைவேற்றுதல் 

ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்துவிட்டால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவரின் நல்லறங்கள் அவருக்கே செல்ல வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அவர்பட்ட கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்த போது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ''உன் கடன்காரர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! 'ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகüடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.)லிலி அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்' என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சிவிட்டன; குறையாமல் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது. அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : புகாரி (2781) 

(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (6699)