ஞாயிறு, 8 மார்ச், 2015

கப்ரில் உள்ளவர்கள் செவியேற்பார்களா?

கப்ரில் உள்ளவர்கள் செவியேற்பார்களா?

திருக்குர்ஆன் கூறுகிறது. அனைத்தையும் செவியேற்கின்ற வல்ல இறைவனிடம் மட்டும் நம்முடைய தேவைகளை முறையிட வேண்டும். 

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! 
அல்குர்ஆன் (27 : 80) 

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. 
அல்குர்ஆன் (35 : 22) 

நீங்கள் அவர்களை (இறந்தவர்களை) அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் 

உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. அல்குர்ஆன் (35 : 14) 

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அல்லாஹ் (மறுமை நாளில் தான்) உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். 
அல்குர்ஆன் (6 : 36) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 
அல்குர்ஆன் (7 : 194) 

கப்ரில் உள்ளவர்கள் உதவி செய்வார்களா? 

இறந்தவர்கள் நல்லவர்களாக இருந்தால் மறுமை நாள் வரும் வரை மண்ணறையில் அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். அவர்களுக்கும் பூமியில் உள்ளவர்களுக்கும் மத்தியில் எந்த விதமான தொடர்பும் இருக்காது. இறந்தவர்களால் உயிருள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. 

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. 
அல்குர்ஆன் (7 : 197) 

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். 
அல்குர்ஆன் (22 : 73) 

உங்கள் இறைவன் அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். 
அல்குர்ஆன் (35 : 13) 

(மண்ணறையில் நல்லடியாரிடம் விசாரணை முடிந்த உடன்) உறங்குங்கள் என்று அவரிடம் சொல்லப்படும். அதற்கு அவர் எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று (எனக்குக் கிடைத்த நல்வாழ்கையை) அவர்களிடம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறுவார். அதற்கு இருவானவரும் அல்லாஹ் உன்னை இந்த இடத்திலிருந்து எழுப்பும் வரை புது மாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்கு. புதுமாப்பிள்ளையை அவருக்குப் பிரியமானவரைத் தவிர வேறுயாரும் எழுப்ப மாட்டார்கள். என்று கூறிவிடுவார்கள். 
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : திர்மிதி (991)