புதன், 4 மார்ச், 2015

பொறாமைத் தீ

பொறாமைத் தீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களுக்கு முன் சென்று சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும் பரவியுள்ளது. வெறுப்பு என்பது மலித்துவிடக்கூடியது. நான் முடியை மலிப்பதை சொல்லவில்லை. மார்க்கத்தை மலித்து விடும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை ஒருவர் நேசம் கொள்கின்றவரை நீங்கள் நம்பிக்கை யாளராக மாட்டீர்கள். எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்களோ அதை பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் சொல்லுவதை பரப்புங்கள்! 

அறிவிப்பவர் : ஸ‚பைர் (ரரி) நூல் : அஹ்மது 1338 

இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது. 

(முஹம்மதே) ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்தியை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக! அவ்விருவரும் இறைவனுக்கு நேர்ச்சை செய்தனர். அவர்களில் ஒருவருடைய நேர்ச்சை மட்டும் ஏற்பட்டுக் கொள்ளப்பட்டது.இன்னொருவரின் நேர்ச்சை ஏற்கபடவில்லை.(ஏற்கப்படாதவர்) நான் உன்னை கொன்று விடுவேன் என்று சொன்னார். (ஏற்றுக் கொள்ளபட்டவர்) அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களிடமிருந்து தான் நேர்ச்சையை அவன் ஏற்கிறான். நீ என்னை கொள்வதற்காக உன்கையை என்னிடத்தில் நீட்டினாலும் நான் உன்னை கொள்வதற்காக என் கையை உன்னிடத்தில் நீட்டமாட்டேன்.அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வை பயப்படுகிறேன்.என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாகுவாய் என்று தான் நினைக்கிறேன்.அது தான் அநீதி இழைத்தோரின் கூலி. அவரது உள்ளம் அவனது சகோதரரை கொள்வதற்கு அவருக்கு அலங்கரித்துக் காட்டியது. அவர் அவரைக் கொன்று நஷ்டவாளியானார் 

(அல்குர்ஆன் 5:27முதல் 30வரை) 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்) 

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 5025 

முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா?அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்து ரில்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள் 

அறிவிப்பவர்: அபூ ஹ‚ரைரா(ரரி) நூல்: முஸ்லிம்936 

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் 

நான் உனக்கு கட்டளையிட்டிருக்க (ஆதமுக்கு) நீ பணியாமல் இருக்க உன்னை தடுத்தது எது?என்று (இறைவன்) கேட்டான். அதற்கவன் நான் அவரை விட சிறந்தவன் நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று சொன்னான் 

(அல் குர்ஆன் 7:12) 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அப்போது ஒரு மனிதர் ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?) என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை இழிவாக கருதுவதும் தான் 

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: முஸ்லிம் 147 

நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்வதை கற்றுத் தரும் போது.. 

இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினரின் மீதும் அருள்புரிந்ததைப் போல முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அருள்புரிவாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அபிருவித்தி செய்ததைப் போல முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அபிருவித்தி செய்வாயாக! 

அறிவிப்பவர்: இப்னு உஜ்ரா(ரலி) நூல்: புகாரி 6357 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான். அவர்களுக்கு அருள்புரிந்ததைப் போன்று தமக்கும் அருள்புரியுமாறு நபி(ஸல்) அவர்கள் பிராத்திக்க சொல்கிற 

இன்னும் அல்லாஹ் தான் விரும்பியவருக்கு அருட்கொடையை வழங்குவதாக கூறுகிறான். 

அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் 

(அல் குர்ஆன் 5:54) 

இந்த அருட்கொடை வழங்குதல் அல்லாஹ்வின் அதிகாரம். இதை பார்த்து பொறாமை கொண்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றுதாகிவிடும் 

நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான் 

அல்லாஹ்வின் அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கும் இல்லை. 

(அல் குர்ஆன் 3:128) 

இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான் 

எங்கள் இறைவா எங்களையும் எங்களுக்கு முன்னால் நம்பிகொண்டவர்களையும் மன்னிப்பாயாக! எங்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை கொண்டோருக்கெதிராக பொறாமையை ஏற்படுத்திவிடாதே . நீயே மன்னிப்பவன் கருணையாளன் 

(அல் குர்ஆன் 59:10) 

இது நபித்தோழர்கள் செய்த பிராத்தனையாக குறிப்பிடுகிறான். 

அல்லாஹவின் அருட்கொடை வழங்கப்பட்டவர்கள் பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும் படியும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

பொறாமைகாரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். 

(அல் குர்ஆன் 113:5) 

(முஹம்மதே!) சொல்வீராக உமது இறைவன் நாடியதை தவிர வேறொன்றும் எங்களுக்கு அணுகாது. 

(அல் குர்ஆன் 9:51)